
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் சட்டப் பேரவைக்கு வந்தனர்.
இதே போன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்எல்ஏக்களும் சட்டசபை வந்தனர்.
அவை தொடங்கியதில் இருந்தே கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து 3 முறை கடுமையான அமளி ஏற்பட்டதால் சட்டசபை போர்களம் போல் காட்சி அளித்தது.
சபாநாயகரின் முன்பு இருந்த நாற்காலிகள் உடைக்கப்பட்டன ,மைக் நொறுக்கப்பட்டது, இதனையடுத்து அ
சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார்.அதேநேரத்தில் சட்டசபைக்குள் ஏற்பட்ட கடும் அமளியால் வெளியிலும் பதற்றம் நிலவியது. உடனடியாக தலைமைச் செயலகம் செல்லும் சாலைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன.
அப்பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை சாலையே வெறிச்சோடக் காணப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது,