அப்படிபோடு.. ஆன்மீக மக்களின் பொற்காலம் திமுக ஆட்சி தான்.. மாஸ் காட்டும் அமைச்சர் சேகர்பாபு..!

Published : Jul 24, 2021, 06:37 PM ISTUpdated : Jul 24, 2021, 06:43 PM IST
அப்படிபோடு.. ஆன்மீக மக்களின் பொற்காலம் திமுக ஆட்சி தான்.. மாஸ் காட்டும் அமைச்சர் சேகர்பாபு..!

சுருக்கம்

கடந்த 75 நாட்களில் தினமும் 2 இடங்கள் என இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு இடங்களை  மீட்டுள்ளது. சிறிய கோவில் முதல் அனைத்து கோவில் களிலும்  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் படிப்படியாக நடந்து வருகிறது. அவை 100 நாட்களில் முழுமையாக செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு;- தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் உள்ள கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறாமல் தொய்வு அடைந்துள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்து குடமுழுக்கு பணிகள்  விரைவுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்களின் குறைகளை கேட்டு தீர்வு காணவும், கோயில் நிலங்களில் முறையாக வாடகை செலுத்தாதவர்கள், ஆக்கிரமிப்பு குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

 தமிழகத்தில் கோயில்களை தூய்மை நிறைந்த இடமாக மாற்றி, தேர்கள் மற்றும் தெப்பகுளங்களை சரிசெய்ய ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளனர். அனைத்து கோவில்களிலும் ஒருகால பூஜையாவது  நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு ஆன்மீக மக்களின் பொற்காலமாக இருக்கும். 

தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்களை விட வசதியுள்ளவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்பை முதலில் கைப்பற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 75 நாட்களில் தினமும் 2 இடங்கள் என இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு இடங்களை  மீட்டுள்ளது. சிறிய கோவில் முதல் அனைத்து கோவில் களிலும்  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் படிப்படியாக நடந்து வருகிறது. அவை 100 நாட்களில் முழுமையாக செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!