அட ஆண்டவா இது என்ன கொடுமை.. 10 நாட்களில் 543 குழந்தைகளுக்கு கொரோனா.. மூன்றாவது அலை ஆட்டம் ஆரம்பம்.??

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2021, 5:15 PM IST
Highlights

இதில் 88 சிறுவர்கள் ஒன்பது வயதுக்கும் குறைவானவர்கள் என்றும், 455 குழந்தைகள் 10 முதல் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த 5 நாட்களில் 263 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,

கடந்த 10 நாட்களில் சுமார் 543 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கர்நாடக மாநிலத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படாத நிலையில், பெங்களூருவில் குழந்தைகளிடையே வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்துவருகிறது. இது கர்நாடக மாநிலத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை 180-க்கும் அதிகமான நாடுகள் வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் நோய் தொற்றில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையில் தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மெல்ல கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று கடந்த சில வாரங்கலாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இந்தாண்டு இறுதியல் மூன்றாவது அலை வேகமெடுக்கும் என ஐசிஎம்ஆர் எச்சரித்து வருகிறது. 

குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமாளிப்பதற்கான மருத்துவ கட்டமைப்புகளை மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அதேநேரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு சோதனையிலிருந்து வரும் நிலையில், இன்னும் அதற்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பெங்களூரில் குழந்தைகள் மத்தியில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு தினசரி கோவிட்-19 தொற்று எண்ணிக்கை 12 % இருந்து 14 சதவீதமாக உள்ளது.  இதில் அதிகமாக பாதிக்கப்படுவது  18 வயதிற்கு துப்பட்டா சிறுவர்களே என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 18 வயதுக்கு கீழ் உள்ள 546 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 88 சிறுவர்கள் ஒன்பது வயதுக்கும் குறைவானவர்கள் என்றும், 455 குழந்தைகள் 10 முதல் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த 5 நாட்களில் 263 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநில சுகாதாரத் துறை மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது. தற்போது சிறுவர்கள், குழந்தைகள் மத்தியில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா என்ற சந்தேகத்தில் மருத்துவத் துறையினர் குழம்பி வருகின்றனர்.

இன்னும் சில ஆண்டுகளில் கொரோனா என்பது குழந்தைகளுக்கான நோயாக மாறும் என்றும் அமெரிக்கா, நார்வே கூட்டு குழு நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கொரோனா தொற்றால் பாதிப்பேர் என்பது குறைவாகவே இருந்து வரும் நிலையில் அது ஒரு குளிர்கால காய்ச்சல் வைரஸ் போல மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். இந்நிலையில் பெங்களூரில் சிறுவர்கள், குழந்தைகள் மத்தியில் கொரோனா வைரஸ் வேகமெடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 
 

click me!