சென்னையில் இனி இந்த தொல்லை இருக்காது.. பட்டையை கிளப்பும் பிடிஆர்..!

By vinoth kumarFirst Published Aug 13, 2021, 4:38 PM IST
Highlights

எங்கு திரும்பினாலும் மிகக்கேவலமாக அகோரமாக காட்சி அளிக்கக் கூடிய ஒட்டப்பட்ட போஸ்டர்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் இருந்து வருகிறது. 

சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்பட உள்ளதால் சென்னையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்  என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், எங்கு திரும்பினாலும் மிகக்கேவலமாக அகோரமாக காட்சி அளிக்கக் கூடிய ஒட்டப்பட்ட போஸ்டர்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் இருந்து வருகிறது. இவற்றையேல்லாம் பார்க்கும் போது ஒரு குப்பைகளுக்கு நடுவே வாழ்வது போல ஒரு உணர்வை சிறிது நேரத்தில் ஏற்படுத்தி விடும். 

இந்நிலையில், சுவரொட்டிகள் இல்லாத சென்னை என்ற புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி கையிலெடுத்தது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூறுகையில்;-  மாநகரில் அரசு மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அப்புறப்படுத்துதல் மற்றும் சுவர்களில் வரையப்பட்டுள்ள தனியார் விளம்பரங்களை அழித்து, அவ்விடங்களில் வண்ண ஓவியங்களை வரைவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், சுவரொட்டிகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக சுவரோட்டிகளை அகற்றுத் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இதுவரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24,384 இடங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சுவரோட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. சுவரொட்டிகள் நீக்கப்படுவதுடன், வர்ணம் பூசி அழகுபடுத்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, சிங்கார சென்னை திட்டத்திற்கு அச்சாரமிடுவதாக கூறப்பட்டு வந்தது. இதை தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழக பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இன்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது, சென்னையில் பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

click me!