தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்.. மீளமுடியாத துயரத்தில் ஜி.கே வாசன்

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2021, 3:14 PM IST
Highlights

இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது. ஆனால் இன்று காலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.  

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான ஞானதேசிகன் காலமானார். அவருக்கு வயது (71) உடல் நலக்குறைவால் சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதியம் 2:20 மணிக்கு அவர் உயிரிழந்தார். 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பு வகித்தவர் ஞானதேசிகன். மாநிலங்களவையின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்தவர் ஆவார்.  மூப்பனார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அரசியல் தலைவரான அவர், மதிப்புமிக்க அரசியலாளர்களில் ஒருவராக பயணித்தார். சிறந்த நாடாளுமன்றவாதியாக தன்னை நிருபித்துள்ளார் ஞானதேசிகன்.  எந்த கேள்விக்கும் புள்ளி விபரங்களோடு பேசக் கூடியவராகவும், ஆதாரங்களுடன் வாதங்களை முன்வைக்கக்கூடியவதாக திகிழ்ந்தார். சிறந்த அரசியல் பண்பாளராகவும் தமிழக அரசியலில் வலம் வந்தார்.

திடீர் நெஞ்சுவலி காரணமாக கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டதால், கவலைக்கிடமான நிலைக்கு ஆளானார். அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நலம் தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது. ஆனால் இன்று காலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனையடுத்து அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார் இந்நிலையில் மத்தியம் 2:20 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. அவரின் இறப்பிற்கு  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கடந்த 1949 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஞான தேசிகனுக்கு திலகவதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். 

click me!