கொரோனாவுக்கு மத்தியிலும் பொங்கல் சிறப்பு பேருந்து.. 5 லட்சம் பேர் பயணம்.. 5.46 கோடி வருமானம்..

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2021, 1:22 PM IST
Highlights

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக covid-19 நோய்த்தொற்று தமிழகத்தில் பெருமளவு குறைந்துள்ளது. மேலும் பேருந்துகளில் 100% பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10, 276 பேருந்துகளில் இதுவரை 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். மேலும் முன்பதிவு வாயிலாக 5 கோடியே 46 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பின் முழுவிபரம்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்று வருகின்ற வகையில் மாண்புமிகு அம்மாவின் ஆசி பெற்ற இந்த அரசின் சார்பில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர்களின் உத்தரவின்பேரில் போக்குவரத்து துறையின் சார்பில் பல்வேறு சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை மற்றும் பிற முக்கிய ஊர்களில் இருந்தும் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக covid-19 நோய்த்தொற்று தமிழகத்தில் பெருமளவு குறைந்துள்ளது. மேலும் பேருந்துகளில் 100% பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப் பண்டிகையை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லுகின்ற பொதுமக்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில் அரசு செயல்படுத்தி உள்ள  வழிகாட்டுதல்களான கட்டாய முகக் கவசம், வெப்பமானி மூலம் பரிசோதனை, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசு செயல்படுத்தி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த பண்டிகைக்கு பேருந்துகளை இயக்குமாறு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனை பயணிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 11-1-2021, 12-1-2021,  13-1-2021 மற்றும் 14-1-2021 காலை 6 மணி வரையில் சென்னையில் இருந்து 10,276 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5,06,712 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். 

இதுவரை  1,22,600 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து 45,275 பயணிகளும், பிற ஊர்களில் இருந்து 77,375 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் போக்குவரத்து கழகத்திற்கு 5 கோடியே 46 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற பகுதிகளிலிருந்து மற்ற ஊர்களுக்கும் சென்றுள்ள பயணிகள் திரும்பிட ஏதுவாக வரும் 17-1- 2021 மற்றும் 19-1-2011 ஆகிய மூன்று நாட்களுக்கு பிறகு ஊர்களில் இருந்து சென்னைக்கு 9,543 பேருந்துகளும் சென்னையைத் தவிர்த்து மற்ற பிற இடங்களுக்கு 5 ,727 பேருந்துகள் என ஆக மொத்தம் 15, 270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

click me!