பாஜகவில் எனக்கு உரிய மரியாதை கொடுக்குறாங்க - குஷ்பு... இக்கண்றாவியில் அப்பாவி பெண்களை நினைத்தால்- கஸ்தூரி!

Published : Aug 25, 2021, 09:25 PM ISTUpdated : Aug 25, 2021, 09:27 PM IST
பாஜகவில் எனக்கு உரிய மரியாதை கொடுக்குறாங்க - குஷ்பு...  இக்கண்றாவியில் அப்பாவி பெண்களை நினைத்தால்- கஸ்தூரி!

சுருக்கம்

தேசிய பா.ஜனதாவிலும் சரி, தமிழக பா.ஜனதாவிலும் சரி, எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுத்தான் வருகிறது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.  

தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கட்சி பதவியிலிருந்து கே.டி. ராகவன் விலகினார். கே.டி.ராகவன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சில கோரிக்கை வைத்தன. கே.டி.ராகவனின் கேவலமான செயல்  அக்கட்சியைச் சேர்ந்த குஷ்பு என்ன கருத்து தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நடிகை குஷ்பு வாய்த் திறந்திருக்கிறார்.
குஷ்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தேசிய பா.ஜனதாவிலும் சரி, தமிழக பா.ஜனதாவிலும் சரி, எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுத்தான் வருகிறது. ஆனால், இங்கு நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது விசாரிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரம். அதற்காக பா.ஜனதாவில் பெண்களை மதிப்பதே இல்லை என ஒட்டுமொத்த கட்சியையும் சிலர் குற்றம்சாட்டும்போது எனக்கு வேதனை அளிக்கிறது. பா.ஜனதாவில் ஏராளமான பெண்கள் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார்கள்.” என்று குஷ்பு தெரிவித்துள்ளார். 
நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இத்தனை நாட்கள் ஒரு டி.வி. விவாதம் கூட முழுதாக பார்க்கவில்லை. இன்று சேர்த்து வைத்து எக்கச்சக்கமாக பார்த்துவிட்டோம். இந்த கண்றாவியில் சிக்கி பொதுவெளியில் விவாதிக்கப்படும் அப்பாவி பெண்களை நினைத்தால்...” என்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!