ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சிக்கு தயாராகுங்கள்..! எத்தனை விண்ணப்பங்கள் தெரியுமா?

First Published Mar 26, 2018, 4:12 PM IST
Highlights
Get ready for training on April 5th Do you know how many applications


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும்  8000 மாணவர் நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும்  பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.

மேலும் 2,000 பேருக்கு நேரடியாகவும், 6,000 பேருக்கு டிஜிட்டல் முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், தேசிய அளவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளதோடு விலக்கு அளிக்க முடியாது என வெளிப்படையாக தெரிவித்தும் விட்டது.

இதையடுத்து கடந்த முறையை போல தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் தேர்விற்கு பயிற்சியளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வரும் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ ஏற்கனவே அறிவித்திருந்தது.

நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும். அதேபோல் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் நீட் தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும். நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும்  8000 மாணவர் நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும்  பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.

மேலும் 2,000 பேருக்கு நேரடியாகவும், 6,000 பேருக்கு டிஜிட்டல் முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!