என் மேல கேஸ் போட்டுக்கோங்க... திமுகவை விடாமல் துரத்தும் மாரிதாஸ்..!

By Thiraviaraj RMFirst Published Nov 18, 2019, 12:06 PM IST
Highlights

உண்மைக்கு புறம்பானது என்றும் திமுக கருதும்பட்சத்தில் தாராளமாக என் மீது வழக்குப் பதிவு செய்யலாம். 

மிசா விவகாரம் குறித்து நான் சொல்லும் கருத்துக்கள் வதந்தி என்றும், அது உண்மைக்கு புறம்பானது என்றும் திமுக கருதும்பட்சத்தில் தாராளமாக என் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என மாரிதாஸ் சவால் விடுத்துள்ளார்.

 

மிசாவில் மு.க.ஸ்டாலின் கைதான விவகாரம் ஓய்ந்தபாடில்லை. இந்த விவகாரம் குறித்து மாரிதாஸ் தனது சமூகவலைதள பக்கங்களில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நான் மிசா சார்ந்து முன் வைத்த வாதங்கள் எதுவும் வதந்திகள் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்டது அல்ல. அப்படி வதந்தி என்றும், அது உண்மைக்கு புறம்பானது என்றும் திமுக கருதும்பட்சத்தில் தாராளமாக என் மீது வழக்குப் பதிவு செய்யலாம். 

மக்கள் உண்மையை தேடி அறிந்து கொள்ளட்டும். மிசா கைதி நானே ஆதாரம் என்கிறார் கி வீரமணி. முதலில் யுனெஸ்கோ விருதுக்கான ஆதாரத்தை வெளியிடவும். பகுத்தறிவு இருக்கா இல்லையா ? என்பதை விட மானம் என்ற ஒன்று இருக்கா உங்களுக்கு? மே மாதம் ஆதாரம் வெளியிடப் போகிறேன் சொன்னவர் இன்று வரை UNESCO அங்கீகரிக்கப்பட்ட ஆதார சான்று வெளியிடவில்லை.

1975களில் அரசியல்வாரிசாக, எம்ஜிஆருக்கு இணையாக தன் மூத்த மகன் முத்துவை தான் சினிமாதுறையில் இறக்கினார் கருணாநிதி. 1976 எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதியின் மூத்த மகனான முத்தை கைது செய்யாத போலீஸ்,ஸ்டாலினை மட்டும் தேடி கைது செய்து அடித்து நொருக்க காரணம் என்ன?’’எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

நான் மிசா சார்ந்து முன் வைத்த வாதங்கள் எதுவும் வதந்திகள் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்டது அல்ல. அப்படி வதந்தி என்றும்,அது உண்மைக்கு புறம்பானது என்றும் திமுக கருதும்பட்சத்தில் தாராளமாக என் மீது வழக்குப் பதிவு செய்யலாம்.

மக்கள் உண்மையை தேடி அறிந்து கொள்ளட்டும்.

— Maridhas (@MaridhasAnswers)

 

click me!