தமிழகத்தில் பொதுமுடக்கம் அக்டோபர்31ம் தேதி வரை நீடிப்பு..! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.!

By T BalamurukanFirst Published Sep 29, 2020, 8:53 PM IST
Highlights

தமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..

"பேரிடர்மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது.தமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு பள்ளி, புறநகர் ரெயில், சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

அதனால்தான், பிரதமர், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய அதிக எண்ணிக்கையில் ஆய்வக பரிசோதனை செய்தல், நோய்த் தொற்றை கட்டுப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்கின்றது என்றும், தமிழ்நாட்டை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்றும் அண்மையில் நடைபெற்ற காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவித்தார்.

click me!