உதயநிதி பிஞ்சிலேயே பழுத்துவிட்டார்.. பெண்களை பற்றி அவதூறாக பேச அவர் வளர்ப்பே காரணம்... எடப்பாடியார் சரவெடி..!

Published : Jan 09, 2021, 04:01 PM IST
உதயநிதி பிஞ்சிலேயே பழுத்துவிட்டார்.. பெண்களை பற்றி அவதூறாக பேச அவர் வளர்ப்பே காரணம்... எடப்பாடியார் சரவெடி..!

சுருக்கம்

ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார். 

ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார். 

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல. சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் அதிமுக வெற்றி பெற முடியும். நான் இரவு, பகல் பாராமல் உழைக்க தயாராக உள்ளேன். சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். 

கட்சியே எனது குருதி என ஓடிக்கொண்டுள்ளது. தேர்தல் அறிவப்பதற்கு முன்பு அதுதொடர்பான பணிகளை நாம் முடிக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திற்கும் 5 குழுக்களை அமைக்க வேண்டும். தேர்தல் வியூகத்தை சரியாக செயல்படுத்த வேண்டும். திட்டம் போடும் தேர்தல் வியூகத்தை அமைத்து தேர்தலை சந்தித்தால், வெற்றி உறுதி.

ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் அளித்த புகார் மனுவில் துளியளவும் உண்மையில்லை. பொய்யான அறிக்கைகளை முறியடிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க தயார் ஆனால், அவர் விவாதத்திற்கு வரவில்லை. திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது உள்ள வழக்குகளை மறைக்கவே அதிமுக அரசு மீது ஸ்டாலின் பொய் புகார் தெரிவிக்கிறார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி அதிமுக நல்லாட்சிக்கு சான்று.

பெண்கள் குறித்து இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலின், பிஞ்சிலே பழுத்துவிட்டீர்கள். அவரது வளர்ப்பு அப்படியுள்ளது. ஜெயலலிதா நினைவிடம் 30 நாட்களுக்குள் திறக்கப்படும். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லம் நினைவில்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மீண்டும் ஆட்சி மலர பாடுபடுவோம். என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும், பொதுக்குழுவுக்கும் நன்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..