என்னது அண்ணாமலை கடனாளியா? அவரு வீடு வாடகையே எத்தனை லட்சம் தெரியுமா? அம்பலப்படுத்தும் காயத்ரி ரகுராம்.!

By vinoth kumar  |  First Published Mar 20, 2023, 6:50 AM IST

தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என தெரிவித்திருந்தார். 


காவல்துறை அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்தேன். தற்போது கடன்காரனால இருக்கிறேன் என அண்ணாமலை கூறியதற்கு  காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார். 

தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், திராவிட கட்சிகளுடன்  இணைந்து பாஜக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு தமிழக பாஜக மூத்த தலைவர்கள் கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தனித்து முடிவெடுக்க முடியாது. தேசிய தலைமை தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் என கூறிவருகின்றனர். 

Latest Videos

இதையும் படிங்க;- கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை.! ஆனால் எனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்..! - அண்ணாமலை அதிரடி

இவரது பேச்சு பெரும் விவாதமாக மாறிய நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது ஏற்புடையதல்ல என்பது என் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்கள் பலரிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன். கட்சிக்குள் நான் பேசியதாக கூறப்படும் கருத்துகள் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  அது நல்லது தான்.  தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை.  நான் காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன் என கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் முன்னாள் நிர்வாக காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க;-  கூட்டணி பற்றியோ வேட்பாளர் பற்றியோ பாஜக மாநிலத் தலைவர் முடிவெடுக்க முடியாது..! எச் ராஜா அதிரடி

இதுதொடர்பாக பாஜகவின் முன்னாள் நிர்வாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- காவல் துறை அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்தேன். தற்போது கடன்காரனால இருக்கிறேன் - அண்ணாமலை 

காவல் துறை அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்தேன். தற்போது கடன்காரனால இருக்கிறேன் - அண்ணாமலை

தற்போது இருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.5 லட்சம் ;
நடத்தும் வார்ரூம் யூடியூபர்கள் செலவு மாதம் 8 லட்சம்;
யூடியூபர் ஒருத்தன் மட்டும் 2 லட்சம்… https://t.co/qnSpHfhShZ

— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram)

 

தற்போது இருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.5 லட்சம் ; நடத்தும் வார்ரூம் யூடியூபர்கள் செலவு மாதம் 8 லட்சம்; யூடியூபர் ஒருத்தன் மட்டும் 2 லட்சம் இப்படி உச்ச ஆடம்பரத்தில் வாழும் அண்ணாமலை அருகே யாரோ வைத்துக் கொண்டு சொல்வது பணம் இல்லாத அரசியல் வேண்டும் என்று கலாய்த்துள்ளார். 

click me!