தொடங்கியது அதிமுகவினரின் டோக்கன் கலாச்சாரம்... 30 சதவீதம் பேருக்கு மட்டுமே நிவாரணம்... பொதுமக்கள் குமுறல்!

By vinoth kumarFirst Published Nov 20, 2018, 1:12 PM IST
Highlights

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு அதிமுகவினர் டோக்கன் தயார் செய்துள்ளனர். அதில், 30 சதவீதம் பேருக்கு மட்டுமே நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் கொந்தளிப்புடன் உள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு அதிமுகவினர் டோக்கன் தயார் செய்துள்ளனர். அதில், 30 சதவீதம் பேருக்கு மட்டுமே நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் கொந்தளிப்புடன் உள்ளனர்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பலத்த மழை பெய்வதால், தனது பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை திரும்புகிறார். கடந்த வாரம் கஜா புயல் ஏற்பட்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி அங்கு போக்குவரத்து மட்டுமின்றி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

பல கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. சாலைகள் சேதமடைந்து, நடந்து செல்ல முடியாத அளவுக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது. இதைதொடர்ந்து அரசு அதிகாரிகள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இதையொட்டி இன்று காலை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  தொடர்ந்து அனைவருக்கும் நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். 

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு, அதிமுகவினர் டோக்கன் தயார் செய்துள்ளனர். அதில் அதிமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அந்த டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனால், கொதிப்படைந்த மக்கள், சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு, குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் டோக்கன் தருவீர்களாக என கெட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கிராமங்களில் இதுவரை மின் இணைப்பு இல்லாமல் உள்ளதால் இருளில், உணவு இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறி ஆர்ப்பாட்டம் , சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

புயல் பாதிப்படைந்த பகுதிகளுக்கு பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் காவல்துறை சார்பிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் மீட்பு பணிகள் மந்தகதியில் நடந்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

click me!