நாக்கை மாற்றி, வாக்கை மாற்றி பேசுறது உங்க டீம் பொழப்பு... தம்பிதுரையை தெறிக்கவிட்ட தி.மு.க.!!!

By vinoth kumarFirst Published Nov 22, 2018, 3:59 PM IST
Highlights

தளபதி அன்னைக்கு பாராட்டுனதும் சரியே, இன்னைக்கு திட்டுறதும் சரிதானே தம்பிதுரை சார்! பேரிடர் மேலாண்மை குழுவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நல்லா இருந்ததால முதிகில் தட்டிக் கொடுத்தார். ஆனால் நாகை மாவட்டத்தின் உள்ளே உயிரே உருக்குலைஞ்சு கிடந்த கதை, அரசாங்கத்த கையில வெச்சிருக்கிற உங்களுக்கு பல மணி நேரம் கழிச்சுதானே புரிஞ்சுது! 

திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ போன்றவர்கள் சிரிக்கிற மாதிரியே பேசி மக்களை கடுப்பாக்கிக் கொண்டிருக்க, தம்பிதுரையோ கடுப்பாகுற மாதிரியே பேசி எல்லோரையும் மேலும் எரிச்சலடைய வைத்துக் கொண்டிருக்கிறார்! என்று பொதுவான ஒரு விமர்சனம் உள்ளது. 

இந்நிலையில் நேற்று கரூர் அருகே புலியூரில் நிருபர்களை சந்தித்த தம்பிதுரை, “புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை தடுக்கும் நோக்கத்தோடே ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். முதலில், தமிழக அரசு சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது! என்று பாராட்டியவர் பின், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க சென்ற இடத்தில் தன் கட்சியினரை போராட தூண்டிவிடுகிறார். இதனால் புணரமைப்பு பணிகளில் காலதாமதம் நேருகிறது!” என்று ஸ்டாலினை உரசிப் பேசினார். 

இதற்கு பதில் சொல்லும் விதமாக தங்களின் சமூக வலைதள பக்கங்களில் போட்டுப் பொளந்திருக்கும் தி.மு.க.வின் இணையதள அணியினர் “தளபதி அன்னைக்கு பாராட்டுனதும் சரியே, இன்னைக்கு திட்டுறதும் சரிதானே தம்பிதுரை சார்! பேரிடர் மேலாண்மை குழுவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நல்லா இருந்ததால முதிகில் தட்டிக் கொடுத்தார். 

ஆனால் நாகை மாவட்டத்தின் உள்ளே உயிரே உருக்குலைஞ்சு கிடந்த கதை, அரசாங்கத்த கையில வெச்சிருக்கிற உங்களுக்கு பல மணி நேரம் கழிச்சுதானே புரிஞ்சுது! இதுதானே உங்க கட்சியோட  நிர்வாக லட்சணம், இதை அவர் திட்டுறதுல என்ன தப்பு இருக்குது? உங்கள மாதிரி வசதிக்காகவும், பொழப்புக்காவுமா எங்க தலைவர்  நாக்கை மாற்றி மாற்றிப் பேசுறார்? தேர்தல் நெருங்கி வர்றதாலே மறுபடியும் கரூர் தொகுதிக்குள்ளே நீங்க போனப்ப, மக்கள் வளைச்சு வளைச்சு வண்ண வண்ணமா திட்டுனாங்க. அவங்ககிட்டே எஸ்கேப் ஆக, ‘மத்திய அரசு நிதி ஒதுக்காத நிலையில் நான் என்ன பண்ண முடியும்? வெறுமனே பேசத்தான் செய்யும் பி.ஜே.பி. அரசு, ஆனால் அஞ்சு பைசா ஒதுக்காது’ன்னு பழியை தூக்கி அங்கே போட்டீங்க.

 

நீங்க பேசுனதுக்காக டெல்லியிலிருந்து உரசலும், இடியும் உங்க மேலே வந்து விழுந்தது. ரெய்டுக்கு பயந்து மோடி அரசை தடவிக்கொடுக்கிற மாதிரி பல்டி அடிச்சு பேசினீங்க. ஆனா கஜா புயல் விவகாரத்துல அநியாயத்துக்கு உங்க கட்சி மக்கள்ட்ட அடிவாங்குறதை பார்த்துட்டு மறுபடியும் மத்திய அரசு மேலே பழிபோட்டு பேசுறீங்க. ஆக வாய்ப்புக்கு, வசதிக்கும் மத்திய அரசோட காலை பிடிக்கிறதும் அப்புறம் அசதியில திட்டுறதும் உங்க டீமோட வேலைதான். நாங்க எப்பவும் ஒரே நாக்கு, ஒரே வாக்குதான். இனி தளபதியை பத்தி பேசுறப்ப நல்லா வரலாறை அறிஞ்சுட்டு பேசுங்க!” என்று வெளுத்துள்ளனர். இது தம்பிதுரையின் கவனத்துக்கு போக, மனிதர் கப்சிப்.

click me!