தவளை தண்ணியவிட்டு ஏன் வெளியே வந்துச்சு? ரஜினி டவுட்டு, ரவுசான டவுட்டு!

By vinoth kumarFirst Published Nov 22, 2018, 3:47 PM IST
Highlights

முத்து - நிறைய பேருக்கு பிடித்த படம். இப்போது மேம்படுத்தப்பட்ட இசையுடன் மீண்டும் ரிலீஸாகிறது. எல்லோரும் பார்த்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்! என ரஜினிகாந்த் பேசியுள்ளார். (க்கும், என்னடா தவளை தண்ணிக்கு மேலே வருதே, அடிக்கடி மீடியாவை சந்திக்குதே, எழு பேரு! எட்டு பேரு!ன்னு திடீர் சீன் போடுதேன்னு அப்போவே டவுட்டானேன். முத்து ரீ ரிலீஸா? ஓ.கே. ஓ.கே.)

*  முத்து - நிறைய பேருக்கு பிடித்த படம். இப்போது மேம்படுத்தப்பட்ட இசையுடன் மீண்டும் ரிலீஸாகிறது. எல்லோரும் பார்த்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்! என ரஜினிகாந்த் பேசியுள்ளார். (க்கும், என்னடா தவளை தண்ணிக்கு மேலே வருதே, அடிக்கடி மீடியாவை சந்திக்குதே, எழு பேரு! எட்டு பேரு!ன்னு திடீர் சீன் போடுதேன்னு அப்போவே டவுட்டானேன். முத்து ரீ ரிலீஸா? ஓ.கே. ஓ.கே.)

* தமிழக அரசின் வருவாய் முழுவதும் மத்திய அரசின் கைகளுக்கு சென்றுவிட்டது. கஜானாவின் சாவி டெல்லியிடம்தான் உள்ளது. கஜானா திறந்தால்தான் கஜா புயலால் பாதிக்கப்பட்டர்களுக்கு நிதி வந்து சேரும்! என தம்பிதுரை கூறியுள்ளார். (கரெட்டுதாம்ணே, வறுமையால பாதிக்கப்பட்ட உங்களுக்கெல்லாம் ஃப்ளைட்டு செலவுக்கு டெல்லி பொட்டிய தொறந்து லட்சம் லட்சமா கொட்டுற மாதிரி, அவிய்ங்களுக்கும் கொடுக்குமாண்ணே?)

* மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் 90% இஸ்லாமியர்கள் வாக்குகள் கிடைக்காவிட்டால் காங்கிரஸ் காணாமல் போய்விடும்! என்று காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பேசியுள்ளார். (அப்படியே நாடாளுமன்ற தேர்தலையும் நாடி பிடிச்சு சொல்லிட்டீங்கன்னா, பப்பு ஸ்கெட்ச்சு போட வசதியா இருக்கும்)

* நிவாரண நிதியை டெல்லியிடம் கேட்கிற விதத்தில் கேட்க வேண்டும். ‘கொடுக்கிறாயா, இல்லையா’ என்று கேட்க வேண்டும். முதல்வருக்கு வீரம் இருக்குதான்னு கவனிக்கிறோம்! என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். (ஆமா ஆமா தலைவரே, முள்ளிவாய்க்கால்ல இறுதிப் போர் நடந்தப்ப நீங்க மத்தியரச ச்சும்மா மெரட்டு மெரட்டுன்னு மெரட்டுனீங்களே அதே ஸ்டைல்லதான? அந்த வீரமெல்லாம் கட்டப்பொம்மனுக்கு கூட இருந்ததில்ல.)

* நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிச்சப்ப, மக்களின் உரிமைகளை கேட்டு பெறுவதற்காக நான் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தேன்! - பவன் கல்யாண். (ஏமண்டி, அவரும் உங்க தொண்டு நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்திருந்தார்னா இன்னைக்கு பிராஜெக்ட்டு, ஃபண்டுன்னு எங்கேயோ போயிருப்பீங்க. இப்படி அரசியல்ல சிரஞ்சீவிகாரு அல்லாடியிருக்க மாட்டாரண்டி!)

click me!