ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயலில் உயிரிழந்ததோருக்கு நிதியுதவி… எடப்பாடி அறிவிப்பு!!

Published : Nov 16, 2018, 12:35 PM ISTUpdated : Nov 16, 2018, 12:39 PM IST
ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயலில் உயிரிழந்ததோருக்கு நிதியுதவி… எடப்பாடி அறிவிப்பு!!

சுருக்கம்

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், அரசு செய்துவரும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;- நாகை மாவட்டத்தில் கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என முதல்வர் கூறியுள்ளார். கஜா புயலால் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் தங்கி முழு நிவாரணம் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். 6 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆகையால் பொதுமக்கள் யாரும் அச்சப்படப் தேவையில்லை. கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன் என முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலால் அதிகளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றார். 

கஜா புயலால் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு
எடப்பாடிக்கு நன்றி சொன்ன புதிய பிஜேபி தலைவர்..! எகிரும், அதிமுக மவுசு