சுறுசுறு எடப்பாடி … பம்பரமாய் சுழன்ற அமைச்சர்கள்….கஜா புயலை எதிர்கொண்டு அசத்திய தமிழக அரசு…

Published : Nov 16, 2018, 12:35 PM IST
சுறுசுறு  எடப்பாடி … பம்பரமாய் சுழன்ற அமைச்சர்கள்….கஜா புயலை எதிர்கொண்டு அசத்திய தமிழக அரசு…

சுருக்கம்

கஜா புயல் தாண்டவமாடிய 7 மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் புயலை எதிர்கொள்ளும் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தமிழக மக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

கஜா புயல்  குறித்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டதில் இருந்தே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுறுசுறுப்பாக எடுக்கத் தொடங்கிவிட்டது. எந்தெந்த பகுதிகளில் புயல் தாக்கும், எந்தப் பகுதியில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற லிஸ்ட்டை கையில் வைத்துக் கொண்டு அமைச்சர்கள் ,  தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துப் பணிகளையும் முடுக்கிவிட்டார்.

பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அடைச்சர் விஜய பாஸ்கர்  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்த 4 நாட்களாக இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் அங்கேயே அமர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.

அவரும் ஐஏஎஸ் அதிகாரிகள் சத்யகோபால், ராஜேந்திர ரத்னு போன்றோரும் கச்சிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டனர்,.அந்தமான் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது புயலாக மாறத் தொடங்கிய உடனேயே தமிழக அரசு  முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியது.

புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய ஏழு  மாவட்டங்களுக்கும் சிறப்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு எந்தெந்த இடங்களில் நிவாரண முகாம்கள் அமைச்சலாம் என அதிகாரிகள் உறுதி செய்து, தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, அங்கிருந்த மக்களை மிக பத்திரமாக அழைத்து வந்து நேற்று காலையிலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியரை தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

தொடர்ந்து அந்த முகாம்களை அமைச்சர்ககளும் பம்பரமாக சுறன்று கண்காணித்து வந்தனர். சாகை மாவட்ட முகாம்களை  அமைச்சர் ஓ.எஸ்.,மணியனும், கடலூர் மாவட்ட முகாம்களை அமைச்சர் எம்.சி.சம்பத்தும், திருவாரூர் மாவ்டட முகாட்களை அமைச்சர் காமராஜு அடிக்கடி சென்று பார்வையிட்டு கண்காணித்து வந்தனர்.

திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 95 முகாம்கள் நேற்று மாலை முதல் செயல்பாட்டுக்கு வந்தன., அனைத்து முகாம்களிலும் கிட்டதட்ட 82 ஆயிரம் தங்க சைக்கப்பட்டு அவர்களை புயல் பாதிப்பில் இருந்து தமிழக அரசு காப்பாற்றி இருக்கிறது.

இதே போல் நேற்று மாலையே  தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்  ஊழியர்களை அவர்களது வீட்டுக் அனுப்பச் சொல்லி தமிக அரசு உத்தரவிட்டது.

நேற்று  மாலை முதலே, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து முழுக்க நிறுத்தப்பட்டது. மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து மக்களை போலீசார் எச்சரிக்கை செய்து வெளியேற்றினர்.

புயல் பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி என்பது பற்றி அனிமேஷன் வீடியோவை அரசு வெளியிட்டது. புயல் கரையை தொடும் முன்பாகவே அத்தனை ஏற்பாடுகளும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது. பேரிடர்  கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அங்கேயே முகாமிட்டு உடனுக்குடன் அனைத்து தகவல்களையும் அதிகாரிகளிடமிருந்து கேட்டுப் பெற்று, உரிய உத்தரவுகளை பிறப்பித்து வந்தார்.

இது தவிர, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் முதரலமைச்சரின்  முகாம் அலுவலகத்திற்கு வருவாய் துறை அமைச்சகத்தில் இருந்து அறிக்கை அனுப்பப்பட்டு வந்தன. நேற்று இரவு  7.45 மணியளவில், அமைச்சர் உதயகுமாரை தொடர்பு கொண்ட முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவரம் கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் சிலைமை குறித்து இபிஎஸ் கேட்டறிந்தார்.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உத்தரவுப்படி டேஞ்சராகன பகுதிகளில் புயலின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்தால் அதை மாற்றுவதற்கு  தெடியாக மினக்ம்பங்கள் அநதந்த மாவட்டங்களுக்க கொண்டு செல்லப்பட்டன.

முதலமைச்சர் முதல் ஒட்டு  மொத்த அரசு இயந்திரமும் புயலை எதிர்கொள்ள சிறப்பாகத் திட்டமிட்டு செயலாற்றியது,  புயலுக்கு பின்னர் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இப்படி பயங்கர சுறுசுறுப்பாக செயல்படுவதையே மக்கள் விரும்பி  ரசிக்கின்றனர், 2015 புயலின் போது ஏற்பட்ட நிலை போல் ஆகிவிடக்கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்தார். தற்போது அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகினறன.

 

PREV
click me!

Recommended Stories

EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு
எடப்பாடிக்கு நன்றி சொன்ன புதிய பிஜேபி தலைவர்..! எகிரும், அதிமுக மவுசு