மெகா கூட்டணி மக்கு கூட்டணியானதால் விரக்தி... தெறித்து ஓடும் மாயாவதி..!

By vinoth kumarFirst Published Jun 3, 2019, 6:14 PM IST
Highlights

உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி இடையேயான மெகா கூட்டணி முறிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி இடையேயான மெகா கூட்டணி முறிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

26 ஆண்டுகளுக்கு பிறகு மோடியை வீழ்த்த மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் - சமாஜ்வாதி மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 38 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், 37 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் போட்டியிட்டன. இதனையடுத்து தேர்தல் முடிவில் பாஜக 62 இடங்களை கைப்பற்றியது. மெகா கூட்டணி என்று சொல்லப்பட்ட மாயாவதி 10 இடங்களிலும், அகிலேஷ் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். இதன் காரணமாக பிஎஸ்பி, எஸ்பி கூட்டணி மக்களிடையே எடுபடாத நிலை தெளிவானது.

 இந்நிலையில் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் பெற்ற தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மாயாவதி இன்று ரகசிய ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய மாயாவதி, வரப்போகும் 11 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களவை தேர்தல் முடிந்து ஒரு மாதம் நிறைவடைவதற்குள், சமாஜ்வாதி இடையேயான கூட்டணி உறவை முறித்து கொள்ள பகுஜன் சமாஜ் முடிவு செய்துள்ளது. மேலும் செல்வாக்கு குறைந்து வரும் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைப்பதை விட தனித்து போட்டியிடுவதே மேல் என முடிவுக்கு மாயாவதி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

click me!