ஹிந்திக்கு எதிரா பேசுனவங்கள சுட்டாங்க .. மறந்துட்டீங்களா? பயம் காட்டும் தமிழிசை...

By sathish kFirst Published Jun 3, 2019, 5:13 PM IST
Highlights

இந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது, துப்பாக்கி சூடும் நடந்தததை மறந்துட்டீங்களா? என தமிழக,பிஜேபி தலைவர், தமிழிசை கூறியுள்ளார்.
 

இந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது, துப்பாக்கி சூடும் நடந்தததை மறந்துட்டீங்களா? என தமிழக,பிஜேபி தலைவர், தமிழிசை கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு  மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டது.  

இதற்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், சினிமா நட்சத்திரங்களும் நாங்கள் இந்திக்கு எதிராக இல்லை, ஆனால் இந்தி திணிப்புக்கு எதிராகதான் இருக்கிறோம், அதை எங்களின் விருப்பத்திற்காக இருக்க வேண்டுமே தவிர எங்கள் மீது திணிக்கக் கூடாது என கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். 

இதுகுறித்து அறிக்கை விட்ட தமிழிசை; கஸ்துாரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையை, மத்தியஅரசுக்கு அனுப்பியுள்ளது.அதில், மும்மொழி கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அது, பரிந்துரை தான்; மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை; முடிவும் செய்யவில்லை.'எந்த மொழியும், எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெளிவாகச் சொல்லி விட்டார். அதேபோல, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால் நிஷாங்கும், 'ஹிந்தியை திணிக்கும் எண்ணம் இல்லை' என, கூறியிருக்கிறார். இதே கருத்தை, பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இல்லாத கறுப்பு பூனையை, இருட்டில் தேடுகின்றனர். இனி யாரும், ஹிந்தி திணிப்பு என, பொய் பிரசாரம் செய்ய வேண்டாம்; அது, எடுபடாது.'கஸ்துாரி ரங்கன் குழு, இப்படி ஒரு அறிக்கையை எப்படி தரலாம் என, ஸ்டாலின் கேட்கிறார். அறிக்கை கொடுக்கலாம்; அதை ஏற்றுக் கொண்டால் தானே கொள்கை முடிவு.

மீத்தேன் ஆராய்ச்சிக்கு, ஸ்டாலின் கையெழுத்திட்டார். ஏன் ஆராய்ச்சிக்கு அனுமதித்து கையெழுத்திட்டார்; முதலிலேயே முடியாது என, ஏன் கூறவில்லை?பக்தவத்சலம் முதல்வராக இருந்த காலத்தில் தான், இந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது, துப்பாக்கி சூடும் நடந்தது. 

இதையெல்லாம் மறந்து விட்டு, இன்றைய காங்கிரசார், திமுகவுடன் சேர்ந்து, ஹிந்தியை எதிர்ப்பதாக சொல்வது தான் நாடகம்.மத்திய அரசின் அலுவலகங்களில், ஹிந்தி பயன்பாட்டை அதிகரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்ட, ப.சிதம்பரம், இன்று, ஹிந்தி பயன்பாட்டை கண்டிப்பது வேடிக்கை.இவ்வாறு, தமிழிசை கூறியுள்ளார்.

click me!