அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும்.. தமிழக பட்ஜெட் அறிவிப்புகளின் முழு விவரம்..!

By vinoth kumarFirst Published Aug 13, 2021, 11:45 AM IST
Highlights

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி' கலைஞர் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும், ரூ.10 லட்சம் வழங்கப்படும் என நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி' கலைஞர் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும், ரூ.10 லட்சம் வழங்கப்படும் என நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். 

* உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட 4,57,645 மனுக்களில் 2,29,216 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.

* வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கெண்ட குழு அமைக்கப்படும்.

* அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தர்வுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனைத்து பொதுசேவை துறைகளிலும் மின்னணு அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்.

* பொது வினியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்

* அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்

* 2.05 லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது

* பொது நிலங்களை முறையாக பயன்படுத்த ‛அரசு நில மேலாண்மை அமைப்பு' அமைக்கப்படும்

* அரசு நிதி சார்ந்த வழக்குகளை கையாள ‛வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு' உருவாக்கப்படும்.

* அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைக்கப்படும்

* 1921ம் ஆண்டு முதலான சட்டசபை ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும்.

* அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

* ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி' கலைஞர் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும், ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

* செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் கீழ் தமிழ் படைப்புகள் மொழிப்பெயர்க்கப்படும்.

* தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்

* கீழடி, சிவகளை, கொடுமணல் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியர் தளங்களாக அறிவிக்கப்படும்.

* 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள 'செம்மொழி தமிழ் விருது' இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்.

* சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும்.

* தலைமைச் செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்து துறை அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக பயன்படுத்தப்படுவது வலுப்படுத்தக்கூடும்.

* உலகப் புகழ்பெற்ற செவ்வியல் இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்

* உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.

* சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ரூ.4807.56 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு 

click me!