தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Sep 23, 2020, 10:58 AM IST
Highlights

 எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். வெறு வாயில் மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போன்று இப்போது வேளாண் மசோதாக்களை வைத்து மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமோ, சூழலோ தற்போது இல்லை என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.பி.உதயகுமார் சென்னையில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து குறைந்த அளவு மட்டுமே இயக்கப்படுவதாகவும், பின்னர் அதிகரிக்கப்படும் என்றார். தமிழக அரசின் நடவடிகையால் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. 

மேலும், பேசிய அவர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். வெறு வாயில் மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போன்று இப்போது வேளாண் மசோதாக்களை வைத்து மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு எப்போது அமைக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தேவைப்படும் போது இதுபற்றி தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். சசிகலா இணைப்பு குறித்து எனக்கு தெரியாது. அதிமுகவில் நான் ஒரு சாதாரண தொண்டன் என மழுப்பலான பதில் கூறிவிட்டு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நழுவினார். 

click me!