செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்…. தமிழக அரசு அதிரடி….

 
Published : Aug 22, 2017, 11:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்…. தமிழக அரசு அதிரடி….

சுருக்கம்

driving lisence

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்…. தமிழக அரசு அதிரடி….

வரும் 1 ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் தங்களது ஒரிஜினல் லைசென்ஸை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில் வாகன விபத்துக்களைகுறைக்கவும் உயிரிழப்புக்களை தடுக்கவும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

போக்குவரத்து விதிகளை மீறியதாக 9500 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் தங்களின் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார். 

 

 

 

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!