ஏழைகளுக்கு இனி இலவசமாக வைத்தியம் செய்யப்போறேன்…  முன்னாள் அமைச்சர் ஹ்ண்டே அதிரடி அறிவிப்பு !!!

First Published Nov 29, 2017, 8:10 AM IST
Highlights
free treatement for public people ...doctor handey


எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் ஹண்டே தனது 91 ஆவது பிறந்த நாளையொட்டி, இனி ஏழை – எளிய நோயாளிகளுகுக இலவசமாக வைத்தியம் பார்க்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் சுகாராத்துறை அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர் டாக்டர் ஹண்டே.  எம்ஜிஆர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது, ஹண்டேதான் அவரது உடல்நலம் குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தார்.

தற்போது சென்னை அமைந்தகரையில் மருத்துவமனை நடத்தி வரும் ஹண்டே நேற்று தனது 91 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். ஹண்டேவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஹண்டே வெளியிட்டுள்ள தனது பிறந்தநாள் செய்தியில், இனி தனது வாழ்நாள் முழுவதும் நோயாளிகளுக்கும், ஏழை – எளிய மக்களுக்கும் இலவசமாக மருத்துவம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

 

 

click me!