மீண்டும் ஓசி பிரியாணி கேட்டு ஓட்டல்காரரை செம்ம வெளு வெளுத்த திமுக நிர்வாகி..!

Published : Mar 24, 2019, 11:32 AM IST
மீண்டும் ஓசி பிரியாணி கேட்டு ஓட்டல்காரரை செம்ம வெளு வெளுத்த திமுக நிர்வாகி..!

சுருக்கம்

சென்னையில் மீண்டும் ஓசி பிரியாணி கொடுக்காத ஆத்திரத்தில் ஊழியர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திமுக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மீண்டும் ஓசி பிரியாணி கொடுக்காத ஆத்திரத்தில் ஊழியர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திமுக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை வேளச்சேரி, காந்தி நகரைச் சேர்ந்தவர், அப்துல்லா (28), அதே பகுதியில், பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியைச் சேர்ந்த மேகநாதன், 23, தமிழ்செல்வன், 25 ஆகியோர், இவரது கடைக்கு வந்துள்ளனர். குடிபோதையில் இருந்த இருவரும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டதற்கு கடையின் மேலாளர் அப்துல்லா பணம் கேட்டதால், குடிபோதையில்  ஆத்திரமடைந்த மேகநாதன், ''நான், தி.மு.க., நிர்வாகி என்று தெரிந்தே பணம் கேட்கிறாயா' என, மிரட்டி உள்ளார். 

பின்னர் அப்துல்லாவின் செல்போனை தட்டிவிட்டு அப்துல்லா முகத்தில் ஓங்கி குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அப்துல்லாவிற்கு உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த அப்துல்லா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அப்துல்லா கொடுத்த புகாரின் அடிப்படையில் வேளச்சேரி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அப்துல்லாவை தாக்கிய சிசிடிவி காட்சிகளும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் பிடிபட்ட இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி மேகநாதன், தமிழ்செல்வன் என்பதும் தெரிய வந்துள்ளது.
 
 முன்னதாக சென்னையில் ஓசி பிரியாணி கேட்டு அடித்த சூடு அடங்குவதற்குள் பெரம்பலூரில் பெண்களை பியூட்டி பார்லரில் திமுக நிர்வாகி தாக்கியது, திருவண்ணாமலையில் செல்போன் கடையை அடித்து நொறுக்கியது, கருணாநிதி மறைவு சமயத்தில் தள்ளுவண்டிக்காரரை தாக்கி துவம்சம் செய்தது, வேலூரில் காருக்கு வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநரை பெண்டு நிமித்தியது என திமுக ரவுடிகளின் அராஜகம் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?
Free 3 LPG Cylinders Per Year: விலையில்லாமல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்.! யாருக்கு கிடைக்கும் தெரியுமா?