ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது மோசடி வழக்கு... இதுதான் காரணமாம்!!

Published : Apr 27, 2023, 04:38 PM ISTUpdated : Apr 27, 2023, 09:33 PM IST
ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது மோசடி வழக்கு... இதுதான் காரணமாம்!!

சுருக்கம்

தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் வரும் மே.10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக அன்பரசனையும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக குமாரையும் நிறுத்தினர்.

இதையும் படிங்க: ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து; அண்ணாமலை முன்பு காண்டான பாஜக தலைவர் ஈஸ்வரப்பா!!

ஆனால் பாஜக கேட்டுகொண்டதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார். மேலும் அதிமுக சார்பில் ஓபிஎஸ் தரப்பு வேட்புமனு தாக்கல் செய்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதில், கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார், போலி ஆவணங்கள் அளித்து வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இதை அறவே தடுத்து நிறுத்துவது தான் விஏஓ லூர்து பிரான்சிஸ்க்கு செலுத்தக்கூடிய உண்மையான மரியாதை.. கிருஷ்ணசாமி.!

மேலும் சட்ட விரோதமாக அதிமுக பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 உட்பிரிவு 171 ஜீ -ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி