திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சவால்.. ’அங்கே’ சந்திக்கலாம் வாங்க..!

By Thiraviaraj RMFirst Published Jun 10, 2021, 6:33 PM IST
Highlights

5 லட்சம் கொடுப்பேன் என சொல்லிவிட்டு இறப்புக்கான காரணம் போடவிட்டால் எப்படி பணத்தை மக்கள் பெற முடியும்?

கொரோனா இறப்பு சான்றிதழே வழங்காமல் எப்படி 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் வசம் இருந்த துறையில் குறை கண்டுபிடித்தால், சட்டமன்றத்தில் விவாதிக்க தயார் என சவால் விடுத்தார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ‘’மதுரையில் கொரானாவால் தற்போதும் அசாதாரண சூழ்நிலை தான் உள்ளது. தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வமாக இருந்தாலும்,எப்போது தடுப்பூசி கிடைக்கும் என மக்களுக்கும் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியருக்கும் தெரியவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. மக்கள் தினந்தோறும் அலைந்து வருகின்றனர். இதனை கண்டிக்கிறோம். தடுப்பூசி குறித்த சரியான அறிவிப்புகளை மாநில அரசு வெளியிடவில்லை.

இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கான தடுப்பூசியூம் இல்லை. முதல் டோஸ் தடுப்பூசியும் இல்லை. முதல்வர் முகக்கவசம் எப்படி போடுவது? என கூறுகிறார். ஒருவருடத்திற்கு முன்பே முகக்கவசம் போட மக்களுக்கு தெரியும். தடுப்பூசி வாங்குவதில் சாணக்கியத்தனமாக பெற வேண்டும் என்ற நிலையை மக்களும், அதிமுகவும் எதிர்ப்பார்க்கின்றனர். தமிழக அரசு தடுப்பூசிகளை அதிகமாக பெற வேண்டும். தடுப்பூசிகளை பெற முதல்வரும், அமைச்சர்களும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லிக்கு போயிருக்கலாம். தடுப்பூசியை கேட்டு வாங்கியிருக்கலாம்.

தடுப்பூசி பெற நடவடிக்கை எடுக்காமல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். கொரானாவால் இறந்தவர்களுக்கு பிரதமர் பத்து லட்சம் அறிவித்தார். முதல்வர் ஐந்து லட்சம் அறிவிக்கிறார். ஆனால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என சொன்னவர் ஸ்டாலின். கொரானாவால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் அளிக்க மறுக்கின்றனர். என் தொகுதியிலேயே நிறைய பேருக்கு இறப்பு சான்றிதழ் கொடுக்கவில்லை. என் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரானாவால் இறந்தவர்களின் இறப்புச்சான்றிதழில் இறப்புக்கான காரணம் இடம்பெறாது என அரசு மருத்துவமனையில் போர்டு வைத்துள்ளனர். கொரானாவால் இறந்தவர்களின் இறப்புச்சான்றிதழ் விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். 5 லட்சம் கொடுப்பேன் என சொல்லிவிட்டு இறப்புக்கான காரணம் போடவிட்டால் எப்படி பணத்தை மக்கள் பெற முடியும்?

ஐ.பெரியசாமிக்கு இன்னும் துறையை பற்றியே ஒன்றும் தெரியவில்லை. அவர் விருப்பம் இல்லாமல் அத்துறையில் உள்ளார். அந்த துறையை ஏற்றுக்கொள்ளவில்லை. மனவெறுப்பில் உள்ளதாக கூறுகின்றனர். இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே கூட்டுறவு துறையை கணினி மயமாக்கி உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கணினி மயமாக்கப்பட்டு அனைத்து கடன் விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன கடன், யார் வாங்கியது என்ற விவரங்கள் உள்ளது. தவறு செய்தவர்கள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது’’என அவர் தெரிவித்தார்.

click me!