தமிழக அமைச்சர்கள் யாரும் பொதுமக்களுக்காக வேலை செய்யவில்லை. அவர்கள் அனைவருக்கும் அவர்களது குடும்ப வேலையை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுக தலைமை அறிவுறுத்தலின் பெயரில் பல்வேறு ஊழல் முறைகேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அதிமுக தலைமை ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விருதுநகர் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
undefined
ஆட்சியரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைய சொன்ன மின்வாரிய அதிகாரி இடை நீக்கம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி, திமுக அமைச்சர்கள் யாரும் எந்த வேலையும் பார்ப்பது கிடையாது அமைச்சர்களை தலைமை தாங்கும் முதலமைச்சரும் எந்த வேலையும் பார்ப்பது கிடையாது. அவர்களுடைய குடும்ப வேலையை பார்ப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. திமுக ஆட்சியில் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிது என்றார்.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்கே ரவிச்சந்திரன், விருதுநகர் மாவட்டத்திற்கு வருவாய் துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் என இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்தவித நலத்திட்ட உதவிகளும் அவர்கள் செய்ததில்லை. இரண்டு அமைச்சர்கள் சொன்ன வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.
ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்; போஸ்டர் ஒட்டி திமுக நிர்வாகி மிரட்டல்
பின்னர் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவினர் ஏராளமானோர் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு கிழக்கு மாவட்டத்தைச் சார்ந்த நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.