Rajendra Balaji: திருப்பத்தூரில் ராஜேந்திர பாலாஜி பதுங்கல்? உதவிய அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது.!

By vinoth kumarFirst Published Dec 28, 2021, 12:53 PM IST
Highlights

வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்று அவர் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறார். கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது.

பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 17ம் தேதி முதல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தேடி வருகின்றனர். வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்று அவர் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறார். கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது.

அன்ராய்டு செல்போனை பயன்படுத்தாமல் சாதாரண பட்டன் கைப்பேசியை ராஜேந்திர பாலாஜி பயன்படுத்துவதாகவும் எனவே அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சற்றே தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவருக்கு எதிராக கடந்த 23ம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராஜேந்திரபலாஜியை தொடர்பு கொண்டு உதவி செய்ததாக அதிமுகவினர் சிலரிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. திருப்பத்தூர் அடுத்த அக்கரகாரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகியோரை திருநெல்வேலி தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

click me!