பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரிய வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published : Jun 22, 2021, 01:16 PM IST
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரிய வழக்கு.. நீதிமன்றம் அதிரடி  உத்தரவு

சுருக்கம்

நடிகை சாந்தினி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன்  கோரிய வழக்கில் காவல்துறை பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகை சாந்தினி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன்  கோரிய வழக்கில் காவல்துறை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருமணம் செய்து கொள்வதாகக் கூறித் தன்னை ஏமாற்றியதாகவும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.  இதனையடுத்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனை வரும் ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வகுமார் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ஜாமீன் மனு மீது வருகிற 24ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அடையாறு அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..