நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ முன்னாள் அமைச்சர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
திமுக எதிர்ப்பால் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பண்ணன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ முன்னாள் அமைச்சர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பண்ணன் ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில்;- ஓ.பன்னீர்செல்வம் என்ற விஷ நாகப் பாம்பை ஒழிக்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் 1.5 லட்சம் ஓட்டுகளில் அதிமுக தோல்வியடைந்தது.
undefined
இதையும் படிங்க;- தமிழகத்தில் பாஜக பற்றி கவலைப்படாதீங்க.. அவங்க பூஜ்ஜியம் தான்.. திருமாவை தூக்கிப்பேசிய முதல்வர் ஸ்டாலின்!
அதற்கு காரணம் ஓபிஎஸ் என்ற விஷ நாகப் பாம்புதான் காரணம். அந்த பாம்பை ஒழிக்க வேண்டும். அதற்காகத்தான் அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளை அனுசரித்து ஒற்றுமையாக இருந்தால் எப்படி குடும்பம் நன்றாக இருக்குமோ அப்படி மத்திய அரசை எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார்.
இதையும் படிங்க;- திமுக பேச்சை கேட்டு இருப்பாப்பில் ஆடுறீங்களா! இன்னும் 28 அமாவாசைகள் உங்க ஆட்சி ! எகிறி அடிக்கும் இபிஎஸ்.!
இபிஎஸ் அவ்வாறு ஆதரித்ததால் தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை பெற்றுத் தந்தார். திமுக எதிர்ப்பால் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என கூறினார்.