முன்னாள் அமைச்சர்களை தூக்கி எரியும் எடப்பாடி அண்ட் கோ...! சைலண்ட்டா காய் நகர்த்தும் டிடிவி...!

Asianet News Tamil  
Published : Feb 09, 2018, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
முன்னாள் அமைச்சர்களை தூக்கி எரியும் எடப்பாடி அண்ட் கோ...! சைலண்ட்டா காய் நகர்த்தும் டிடிவி...!

சுருக்கம்

former minister dismissed from admk by eps and ops

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, செந்தமிழன்  மற்றும்   கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரை நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆர்.கே.நகரில் அதிமுகவை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். தினகரனின் வெற்றியை அடுத்து அதிமுகவிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர். 

கட்சியின் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி தினகரனின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில் ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டனர். அதையடுத்து நாஞ்சில் சம்பத், புகழேந்தி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், கலைராஜன் ஆகியோரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் நீக்கினர்.

இதைதொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு முன்னாள் எம்.பி. குமாரசாமி உட்பட டிடிவி ஆதரவாளர்கள் 175 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். 

மேலும் டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு கட்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உட்பட 100 க்கும் மேற்பட்டோரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் உத்தரவிட்டனர். 

இந்நிலையில்,  டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, செந்தமிழன்  மற்றும்   கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரை நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிமுக கடந்த 2013 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அடுத்த நாளே அ.தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

திமுக கூட்டணிக்குள் வரும் 3 கட்சிகள்.. காங்கிரசுக்கு கல்தா..! மு.க.ஸ்டாலினின் அதிரடி வியூகம்..!
வடமாநில பெண்கள் படிக்காத அடிமைகள்.. திராவிட மாடல் பெண்கள் மெத்த படித்த மேதாவிகள்..! சீண்டிய தயாநிதி மாறன்..!