திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி காலமானார்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Feb 27, 2020, 8:07 AM IST

 57 வயதான கே.பி.பி.சாமி அண்மைக்காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.


சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் காலமானார். 57 வயதான கே.பி.பி.சாமி அண்மைக்காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Tap to resize

Latest Videos

கே.பி.பி. சாமி அவர்கள்  2011ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி செய்த போது,  மீன்வளத்துளை அமைச்சராக இருந்தார். இவர் திமுக மீனவரணி செயலாளராகவும் பதவி வகித்தவர். மீனவ சமுதாயத்தை சேர்ந்தவரான கே.பி.பி. சாமி மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். 

click me!