பாஜகவின் முக்கிய புள்ளியான ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டாலும், தனித்து போட்டியிடுவேன் என்று கூறியிருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பாஜகவிற்கு எதிராக போர் கொடி
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மற்றும் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக வெளியிட்டுள்ளது. மீண்டும் ஆட்சி தக்கவைக்கும் வகையில் மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்காமல் புதியவர்களுக்கு பாஜக மேலிடம் வாய்ப்புகளை வழங்கிவருகிறது. இதன் காரணமாக பாஜகவில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து போர் கொடி தூக்கியுள்ளனர். ஏற்கனவே பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா (வயது 74) தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
வெயிலின் தாக்கம்: அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் 11 பேர் சுருண்டு விழுந்து பலியான துயர சம்பவம்
இதே போல பாஜகவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி அரசியில் இருந்து விலக கூறுவதாகவும் கர்நாடக மாநில பாஜக நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் தற்போது 2011 முதல் 2012 வரை கர்நாடகவில் பாஜக ஆட்சியில் முதலமைச்சராக இருந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர் இவருக்கும் தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் வாய்ப்பு மறுத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் நேற்று தனது எம்எல்ஏ பதவி மற்றும் பாஜகவில் இருந்து வெளியேறினார். ஹூப்ளி தொகுதியை தமது கோட்டையாக வைத்திருப்பவர் ஜெகதீஷ் ஷெட்டர். மேலும் வடக்கு கர்நாடாகவில் அதிகவுளவு ஓட்டுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவரை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் இன்று காலை பெங்களூருவில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்த ஜெகதீஷ் ஷெட்டர் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, டிகே சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ரந்தீப் சுர்ஜேவாலா, சித்தராமையா ஆகியோர் முன்னிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்.
இதையும் படியுங்கள்
சிபிஐயிடம் சிக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்; 9 மணி நேரம் 56 கேள்விகள்; இறுதியில் சிபிஐக்கு நன்றி!!