விராலிமலையில் உடைத்து எறியப்பட்ட சாமி சிலைகள்.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் கண்டனம்.! போலீஸில் புகார்

Published : May 11, 2021, 10:18 PM IST
விராலிமலையில் உடைத்து எறியப்பட்ட சாமி சிலைகள்.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் கண்டனம்.! போலீஸில் புகார்

சுருக்கம்

விராலிமலை முருகன் கோவில் மலைப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு மனமுடைந்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.  

அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையின் ஒருபுறத்தில் சிவன், முருகன், பார்வதி ஆகிய கடவுள்களின் சிற்பங்களும், மான், புலி ஆகியவற்றின் சிற்பங்களும் செய்து பக்தர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவில்களில் வழிபாடு செய்ய தடைவிதிக்கப்பட்டு கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில், விராலிமலை மலைக்கோவிலும் மூடப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத சூழலில், மலைப்பாதையில் இருந்த சிவன், முருகன், பார்வதி ஆகிய கடவுள்களின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், சாமி சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்து மத கடவுள்கள் மற்றும் இந்து மதத்தினரின் நம்பிக்கையை இழிவுபடுத்துவதை சிலர் தொடர்ச்சியாக உள்நோக்கத்துடன் செய்துவரும் நிலையில், விராலிமலையில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமி சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த விராலி மலை தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், அதைக்கண்டு தனது மனது உடைந்து நொறுங்கிப்போனதாகவும், இச்செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!