காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிப் படுகொலை .. போலீசார் தீவிர விசாரணை..!

Published : Jul 31, 2021, 01:20 PM IST
காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிப் படுகொலை .. போலீசார் தீவிர விசாரணை..!

சுருக்கம்

காஞ்சிபுரம் அருகே திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மதூரை சேர்ந்தவர் சண்முகம். திமுக விவசாய அணி ஒன்றியசெயலாளராகவும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். இவர் தனியார் கல்குவாரி மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கல்குவாரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அவரை கம்பியால் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சாலை பணி டெண்டர் எடுப்பதில் முன்விரோதம் ஏற்பட்டு கொலை நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ் பாரதி..! எச்.ராஜா சாப்பிட்ட எச்சை இலையில் உருள்வாராஇபிஎஸ் ..? என மோசமான கேள்வி
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது..! வீட்டின் கதவை உடைத்து காவல்துறை அதிரடி..!