துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது என்று எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார் ஓபிஎஸ்.
ஈரோடு கிழக்கு தோல்விக்கு எடப்பாடி என்னும் நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் காரணம் என்று ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தவிர எஞ்சிய வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஆனார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அதிமுகவின் தென்னரசு தவிர 75 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுகவின் தோல்வி குறித்து பேட்டி அளித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். அதிமுக மகத்தான வெற்றியை வருங்காலத்தில் பெரும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொருத்தவரை அதிமுகவை கண்டு பிற கட்சிகள் அச்சமடைந்தன.
எந்த தேர்தலிலும் இதுபோல் திமுக பயந்தது கிடையாது. 350 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்து உள்ளது என்றும் கூறினார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்
அதில், தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது.
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஓர் இடைத்தேர்தலில் அதிமுக கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத்தேர்தல்தான். இதற்கு காரணம் துரோகியும், துரோகியும் தலைமையிலான ஒரு சர்வாதிகார கூட்டமும்தான். அதிமுக படுதோல்வி அடைந்திருக்கிறது.
அதற்கு முழுமுதற் காரணம், எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான். இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்து செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. விரைவில் அவை தொடங்கப்படும் என்று அதிரடியாக கூறியுள்ளார் ஓபிஎஸ்.
இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்