ஜெயலலிதா இறந்தது டிச.5 இல்லை...!  ’இந்த தேதி’யில்தான் இறந்தார்...! போட்டு உடைத்த சசிகலா சகோ திவாகரன்...! 

First Published Jan 17, 2018, 6:10 PM IST
Highlights
Former Chief Minister Jayalalithaa died on December 4th


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதியே இறந்துவிட்டார் என சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்தார். அப்போது அமைச்சர்கள், மத்திய பொறுப்பாளர்கள் என யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. 

ஆனால் சசிகலா மட்டும் ஜெயலலிதாவை கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவை பார்க்க யாரையும் சசிகலா அனுமதிக்காததால் அவர் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என பொதுமக்களுக்கு சந்தேகம் எழும்பியது. 

இதனால் அமைச்சர்களும் செய்தி தொடர்பாளர்களும் ஜெயலலிதாவை பார்த்ததாகவும் அவர் சாப்பிட்டதாகவும் மீடியாக்களிடம் பொய் கூறி வந்தனர். ஆனால் அதற்கான ஒரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை. 

இதைதொடர்ந்து செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. 

இதனிடையே டிசம்பர் 5 ஆம் தேதி மாலை ஜெ இறந்ததாக செய்தி வெளியானது. உடனே மருத்துவமனை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதைதொடர்ந்து ஜெ இறக்கவில்லை என மருத்துவமனை மறுப்பு தெரிவித்தது. 

ஆனால் சில மணி நேரங்கள் கழிந்து 11 மணி அளவில் ஜெ இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. 

இந்நிலையில், இன்று மன்னார்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள்விழாவில் பங்கேற்ற சசிகலாவின் தம்பி திவாகரன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதியே இறந்துவிட்டார் என தெரிவித்தார். 

மேலும் ஜெ இறந்ததை அறிவிக்கும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் தாங்கள் வலியுறுத்தியதாகவும் ஆனால் மருத்துவமனை பாதுகாப்பை தாங்கள் உறுதி செய்த பின்னரே அறிவிப்பு வெளியிடுவோம் என அவர்கள் தெரிவித்து விட்டதாகவும் கூறினார். 

click me!