முன்னாள் அதிமுக எம்.பி.யின் மகள் தோல்வி... கடும் விரக்தியில் திமுகவுக்கு தாவ முடிவு..?

By vinoth kumarFirst Published Jan 2, 2020, 6:20 PM IST
Highlights

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்தின் 2-வது வார்டில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் இராவியத்துல் அதரியா தோல்வியை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் இராவியத்துல் அதரியாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி 1,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா மகள் இராவியத்துல் அதரியா 1,307 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்நதார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27-ம் தேதி மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் எண்ணப்பட்டு முடிவு வெளியாகி வருகின்றன. பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றன. 515 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக 146 இடங்களிலும், அதிமுக 131 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் 5067 பதவிகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் ஆளும் அதிமுக 582 இடங்களிலும், திமுக 561 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்தின் 2-வது வார்டில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் இராவியத்துல் அதரியா தோல்வியை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் இராவியத்துல் அதரியாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி 1,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

குடியரிமை சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதிமுகவினர் ஆதரவு அளித்தது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், 2 முறை எம்.பி.யாக தேர்வான அன்வர் ராஜா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தனது மகளை வெற்றி பெற செய்ய இயலாதது, அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்ட போது அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதேபோல், மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்ட போதும் அதிமுக தலைமை மறுத்துவிட்டது. இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் மகளை வெற்றி பெற வைத்து நகராட்சி தலைவராக ஆக்கிவிடலாம் என்று திட்டமிட்டிருந்த அன்வர் ராஜாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதிமுகவில் இருந்து திமுகவில் இணைய அன்வர் ராஜா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!