ஆர்.கே.நகர். தேர்தலுக்கு பிறகு மீண்டெழுந்த அமமுக... அதிமுக நிர்வாகிகளுக்கு படுபயங்கர ஷாக் கொடுத்த டிடிவி.!

By vinoth kumarFirst Published Jan 2, 2020, 5:45 PM IST
Highlights

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுக கட்சி 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும், 32 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றன. 515 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக 146 இடங்களிலும், அதிமுக 131 இடங்களிலும், சின்னம் மற்றும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்ட அமமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் 5067 பதவிகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் ஆளும் அதிமுக 582 இடங்களிலும், திமுக 561 இடங்களிலும், அமமுக 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து அவர் அமமுக என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார். இதையடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அமமுக டெபாசிட் வாங்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, முக்கிய நிர்வாகிகள் அமமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகினர். இதனால், டிடிவி.தினகரனின் செல்வாக்கு அவ்வளவு தான் என்று சொல்லி வந்த அதிமுகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், பல்வேறு மாவட்டங்களில் அதிமுக ஓட்டு வங்கியை சிதறியடித்துள்ளார்.

click me!