
அரசு வேலை மற்றும் அதிமுகவில் பதவி வாங்கி தருவதாக கூறி 7 கோடி ரூபாய் மோசடி செய்தாக சசிகலா உறவினர் பாஸ்கரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகாமாக சொத்து சேர்த்தாக கூறி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் ஊர்ஜிதபடுத்தபட்டு சசிகலாவும், அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து சசிகலாவின் அக்காள் மகளான டிடிவி தினகரன் இரட்டை இலை பெரும் விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்று தற்போது சிறையில் உள்ளார்.
இந்த வரிசையில் தற்போது சசிகலாவின் மற்றொரு உறவினரான பாஸ்கரன் என்பவர் மீது காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில், சசிகலா பொதுச்செயலாளராக உள்ளதை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதிமுகவில் பதவி வாங்கி தருவதாகவும் கூறி 7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குறிபிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீட்டின் முன்பு கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்