
பாஜகவின் பி டீம்தான் ரஜினிகாந்த் என்றும், பதவி ஆசை இல்லை என்று சொல்லும் ரஜினி, நல்லக்கண்ணு ஐயாவை முதலமைச்சராக்குவாரா? என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பேசிசும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பாஜகவின் நெருக்கடியால் நடக்கிறது என்றார். பாஜக இந்துத்துவாவை நிலை நிறுத்த முடியாத ஒரு காரணத்தால் தாங்களாகவே வாக்கு வங்கியை உருவாக்க முடியாததால் ரஜினி, கமல் போன்றவர்களின் முகமூடிகளைப் பயன்படுத்தி வாக்கு வங்கிகளை உருவாக்க நினைக்கிறார்கள் என்று கூறினார்.
பாபா முத்திரையின் கீழ் வெள்ளை தாமரை முத்திரையைக் காட்டினார். அதன் பிறகு ஆன்மீக அரசியல் என்று பேசுவதெல்லாம் அதன் அடிப்படையில்தான் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
இரண்டாம்தர அரசியலை பாஜகா செய்து வருவதாக குற்றம் சாட்டிய திருமுருகன், ரஜினி நடிகர் அவரை ரசிக்கலாம். அது வேறு. ரசிகர்களை கொண்டு வந்து அரசியலில் நிறுத்தினால் அது எப்படி மக்களுக்கு பயனறிக்கும். என்றார்.
25 ஆண்டுகளாக அரசியலில் இருப்தாக சொல்லும் ரஜினி, ராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், அண்மையில் ஏற்பட்ட புயலால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போனது, விவசாயிகள் போராட்டம், அணுஉலை எதிர்ப்பு போராட்டம்,, இதில் எல்லாம் அவர் என்ன செய்தார் என்று கேள்வி கேட்டார். இதை வைத்துத்தான் அவர் மக்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
பாஜகவின் பி டீம்தான் ரஜினிகாந்த். ஸ்லீப்பர் செல் கமல். இவர்கள் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்ப மாட்டார்கள். பதவி ஆசை இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த், நல்லக்கண்ணு ஐயாவை முதல்வராக்குவாரா? என்றும் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பினார்.