பல நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது - கே.சி.வீரமணி கண்மூடித்தனமான நம்பிக்கை...

 
Published : Jan 24, 2018, 11:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
பல நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது - கே.சி.வீரமணி கண்மூடித்தனமான நம்பிக்கை...

சுருக்கம்

For centuries no one can ruin the AIADMK - K.C.Veramani

வேலூர்

பல நூற்றாண்டுகள் ஆனாலும்  அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்  கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி அதிமுக சார்பில் கட்சியின்  நிறுவனத்  தலைவர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா இணைப்புச் சாலை பகுதியில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு, ஆற்காடு ஒன்றியச் செயலாளர் தாஜ்புரா எம்.குட்டி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் ஏ.வி.சாரதி, பொதுக்குழு உறுப்பினர் தா.கு.கணேசன்,

மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் கே.அப்துல்லா, ஆற்காடு முன்னாள் நகர மன்ற தலைவர் ஆர்.புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு நகரச் செயலாளர் எம்.சங்கர்  வரவேற்றார்.  

இந்தக் கூட்டத்தில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்  கே.சி.வீரமணி, "அதிமுக தொண்டர்கள் நிறைந்த இயக்கமாகும். இதனை பல நூற்றாண்டுகள் ஆனாலும்  கூட யாராலும் அழிக்க முடியாது. தமிழக அரசு  மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது" என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் கட்சிப் பேச்சாளர்  பாத்திமாபாபு,  எம்எல்ஏக்கள்  சு.ரவி (அரக்கோணம்), ஜி.லோகநாதன்( கே.வி.குப்பம்), முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் சுமைதாங்கி சி.ஏழுமலை, வி.ராமு,  

ரெண்டாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பெல்.கார்த்திகேயன்,  முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் எஸ்.அன்பழகன், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் வேப்பூர் மணி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!