அதிமுகவை தொடர்ந்து திமுகவின் வழிகாட்டுதல் குழு... புகைப்படம் வெளியிட்டு மானத்தை வாங்கிய உதயநிதி..!

Published : Oct 08, 2020, 02:05 PM IST
அதிமுகவை தொடர்ந்து திமுகவின் வழிகாட்டுதல் குழு... புகைப்படம் வெளியிட்டு மானத்தை வாங்கிய உதயநிதி..!

சுருக்கம்

மண்ணின் மைந்தனா? உளறல் மன்னனா? செயல் நாயகனா? அறிக்கை நாயகனா? மண்ணின் மைந்தனா? மன்னரின் மகனா?

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் முடிந்து எடப்பாடி பழனிசாமியை ப்ரமோட் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை போட்டு எடப்பாடி பழனிசாமியுடன் கம்பேர் செய்து மண்ணின் மைந்தனா? உளறல் மன்னனா? செயல் நாயகனா? அறிக்கை நாயகனா? மண்ணின் மைந்தனா? மன்னரின் மகனா? நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் என்றெல்லாம் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டு வருகிறது. 

 

இது திமுக தரப்புக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தால் விரக்தியான திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ‘டெட்பாடி போல் விழுந்து கிடக்கும் இந்த மானஸ்தன் யார்?' எனக் கேள்வி கேட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை நெட்டிசன்கள் பகிர்ந்து  வருகின்றனர்.

 

அதிலொருவர், ‘’அதிமுகவை தொடர்ந்து திமுகவின் வழிகாட்டுதல் குழு புகைப்படம் அறிவாலயத்தில் வெளியிடப்பட்டது’’ எனக்கூறி உதயநிதி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!