அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடிக்கு வாழ்த்து.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக கூட்டணி கட்சி..!

By vinoth kumarFirst Published Oct 8, 2020, 1:36 PM IST
Highlights

அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. மேலும், தனது ஆதரவாளர்களுடன் இருவரும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததால் அதிமுகவில் பதற்றம் ஏற்பட்டது. இவை அனைத்துக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

இதனையடுத்து, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு வாழ்த்து மழை குவிந்த வண்ணம் இருந்தன.  இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 2021-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற முதல்வர் பழனிசாமிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இதனால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், கடந்த காலங்களில் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் போன்ற அதிமுக அரசின் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்கு வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

click me!