செல்பி எடுக்கக்கூடாது... வெள்ளம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் எச்சரிக்கை!

Published : Aug 12, 2018, 05:37 PM ISTUpdated : Sep 09, 2018, 07:49 PM IST
செல்பி எடுக்கக்கூடாது... வெள்ளம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் எச்சரிக்கை!

சுருக்கம்

வெள்ளம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதேபோல் காவிரி ஆற்றின் நின்று கொண்டு செல்பி எடுக்கக்கூடாது என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுகிறது. 

வெள்ளம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதேபோல்ஆற்றின் நின்று கொண்டு செல்பி எடுக்கக்கூடாது என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. அந்த நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுகிறது. ஆகையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.33 லட்சம் கனஅடியில் இருந்து 1,25 கனஅடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்த போதிலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120.20 அடி என்ற நிலையிலேயே இருந்து வருகிறது. 

கபினி அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 80 ஆயிரம் கன அடியிலிருந்து 60 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 11 கரையோர மாவட்டங்களுக்குக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் காவிரி நதி நீர் அதிக அளவு வெளியேறும்போது, செல்பி எடுத்தல், நீச்சல் அடித்தல் மீன்பிடித்தல் என இதுபோன்ற பொழுதுபோக்கு நடவடிக்கையில் யாரும் ஈடுபடக்கூடாது என 11 மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

அதேபோல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றங்கரையில் குளிக்க வைக்க, விளையாட அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர். வெள்ளம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் கரையோரங்களுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், சேலம், ஈரோடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். அவசர உதவிக்கு 1077, 1070 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!