"அ.தி.மு.க. எம்எல்ஏக்களுக்கு தொகுதிவாசிகள் தொடர் டார்ச்சர்" - ஓபிஎஸ்க்கு ஆதரவாக 5 லட்சம் மிஸ்டு கால்கள்

 
Published : Feb 10, 2017, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
"அ.தி.மு.க. எம்எல்ஏக்களுக்கு தொகுதிவாசிகள் தொடர் டார்ச்சர்" - ஓபிஎஸ்க்கு ஆதரவாக 5 லட்சம் மிஸ்டு கால்கள்

சுருக்கம்

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மக்கள், தங்கள் எம்.எல்.ஏ.க்களை அவர்களின் செல்போனுக்கு அழைத்து, “கிழி,கிழி” என “டோஸ் விட்டு” வருவதால், சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் செல்போனை கண்டு அலறுகிறார்கள்.

தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது. ஆட்சியைக் கைப்பற்றப்போவது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியா?, அல்லது அ.தி.மு.க.பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தலைமையிலான அணியா? என்ற உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில், சசிகலா ஆதரவு அமைச்சர்கள், தங்களுக்கு ஆதரவான 6 பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 130எம்.எல்.ஏ.க்களையும், கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள், இளைஞர்கள் மத்தியில் முதல்வர் ஓ.பன்னீர்ெசல்வத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் வழியாக இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம், ஆன்-லைனில், சசிகலாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

குறிப்பாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்களின் தொகுதி மக்கள் அவர்களின் தனிப்பட்ட செல்போன் எண்களுக்கு அழைத்து கடுமையாக டோஸ்விட்டு, தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான நீங்கள் சரியான முடிவு எடுங்கள், இல்லாவிட்டால், “தொகுதிப் பக்கம் வரமுடியாது” என்றும் கிழிக்கின்றனர்.

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட செல்போன்கள் அனைத்தையும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின், தகவல் தொழில்நுட்ப பிரிவு அந்தந்த தொகுதி மக்களுக்கு அளித்து இந்த ஏற்பாட்டைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்தந்த தொகுதிமக்கள் தங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு செல்போனில் அழைத்து, எதிர்ப்பைத் தெரிவித்து, சரியான முடிவு எடுக்க வலியுறுத்துங்கள் என சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனால், கடந்த 48 மணி நேரத்தில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களக்கு தங்கள் தொகுதியில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. செல்போனை எடுத்தால், தொகுதி மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், திணறும் எம்.எல்.ஏ.க்கள், செல்போனை “ஸ்விட்ச் ஆப்” செய்துள்ளனர். சிலர் தவிர்க்க முடியாமல், “சைலன்ட் மோடில்” வைத்து இருந்தாலும், செல்போனில் அழைப்பு வந்தாலே பயத்தில் நடுங்குகிறார்கள்.

அதேசமயம், தொகுதி மக்கள் இப்படி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு செய்து, கேள்வி கேட்பதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் எதிர்த்துள்ளார். “ ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் தனிப்பட்ட முறையில் செல்போனில், அழைத்து அவர்களுக்கு மிரட்டல் கொடுப்பது கண்டிக்கத்தக்கது. அவர்கள் உண்மையில், தொகுதிமக்களா, அல்லது வேறுயாருமா. இவர்கள் எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கக்கூடாது” என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அவரே முதல்வராக தொடர வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தும், ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க சமூகவலைதளங்களில் கூறப்பட்டு இருந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு இதுவரை 5லட்சத்துக்கும் மேற்பட்ட மிஸ்டு கால் அழைப்புகள் வந்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு