ரஜினி அடித்த திடீர் பல்டி...!! பதற்றத்தில் பாஜக..!! வெளியானது பகீர் பின்னணி...!!

By Asianet TamilFirst Published Sep 18, 2019, 2:21 PM IST
Highlights

சிறுபான்மையின மக்களிடம் இருந்து நம்மை தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் சிலர் ஈடுபட்டுவருகின்றனர். பாஜகவிற்கும் மோடிக்கும் ஆதரவாக சில நேரங்களில் தான் பேசியதை வைத்து  தம்மீது பாஜக முத்திரை குத்தப்பட்டுள்ளது.

இந்தி மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகர் ரஜினாகாந்த் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்,  பாஜகவின் பல திட்டங்களுக்கு  தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவந்த அவர்.  முதல் முறையாக  பாஜகவை நேரடியாக எதிர்த்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலுக்கு ரஜினி அச்சாரம்போட நினைப்பதே இதற்கு காரணம் என்ற கருத்து  பரவலாக  எழுந்துள்ளது. இதன் அரசின் பின்னணி விவரம்... பின்வருமாறு:-

நடிகர் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் மட்டுமல்ல தமிழகமே ஆர்வத்துடன் எதிர் நோக்கி காத்திருக்கிறது. பல ஆண்டுகள்  மௌனத்திற்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு தனது அரசியல் வருகையை பிரகடணம் செய்தார் ரஜினி. ரஜினி ரசிகர் மன்றம் என்பதை ரஜனி மக்கள் மன்றமாக மாற்றி அறிவித்தார். அத்துடன் அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கு இணையான ஒரு பலம் மிக்க கட்சியை உருவாக்குவதே தம் நோக்கம் என கூறியதுடன். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில்  தீவிரம் காட்டினார். ஒருவழியாக கட்சியின் கட்டமைப்பு பணிகள்  95 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. 

 

ஆனாலும் அதிகாரப்பூர்வ கட்சியாக  களத்தில் இறங்குவது குறித்து இதுவரை அறிவிப்பு ஏதும் இல்லை, கடந்த  மக்களவை தேர்தலின் போதே கட்சியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தலே தமது இலக்கு என நிலைபாட்டை கூறினார் ரஜினி. ஆனாலும் இடையிடையே அரசியல் ஆலோசகர்களுடன் இணைந்து புதிய கட்சிக்கான வியூகங்களை வகுத்து வந்த ரஜினி. இடையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் மத்திய அரசின் திட்டங்களுக்கும் சாதகமாகவும் கருத்துகளையும் கூறிவந்தார் ரஜனி.ஆன்மீகமே தன் அரசியல் பாதை என்று கூறி கட்சிபணிகள் தொடங்கியவர்.அடிக்கடி  பாஜகவிற்கு ஆதரவாக நிலைபாடு எடுத்து வந்ததால் ரஜினி அரசியல் இந்துத்துவா அரசியல் என்று விமர்ச்சிக்கப்பட்டது...

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் தனது அரசியல் ஆலோசகர்களை அழைத்து பேசிய ரஜினி.  மக்களின் மன நிலை எப்படி உள்ளது, தற்போதைக்கு கட்சி தொடங்கினால் அதன் சாதக பாதகங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர். ”தன் அரசியல் ஆன்மீக பாதையில் இருக்கும் என்று அறிவித்ததை வைத்து சிறுபான்மையின மக்களிடம் இருந்து நம்மை தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் சிலர் ஈடுபட்டுவருகின்றனர். பாஜகவிற்கும் மோடிக்கும் ஆதரவாக சில நேரங்களில் தான் பேசியதை வைத்து  தம்மீது பாஜக முத்திரை குத்தப்பட்டுள்ளது.  எனவே இது போன்ற விமர்சனங்களில் இருந்து  இனி விலகி இருப்பதே நமக்கு நல்லது. அனைத்து தரப்பு மக்களிம் நம்பிக்கை பெற்றவர்களாக இருந்தால் மட்டுமை வெற்றி கிடைக்கும். எனவே சிறு பான்மையினரை கவரும் வகையிலும் நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று அவர் அப்போது அவர் பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில்தான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  ரஜினிகாந்த்  , இந்திமொழி திணிக்கப்படுவதை ஏற்க முடியாது. தென் மாநில மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். வட மாநிலத்தில்  இந்தி மொழி அல்லாத  மாநிலங்களே இந்தியை ஏற்க மறுத்து வரும் நிலையில் தமிழகத்தில் திணிப்பது நியாமில்லை  என  பாஜகவிற்கு எதிர் நிலை எடுத்துள்ளார். பாஜக முத்திரையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே நடிகர் ரஜினி காந்த் இந்திமொழி எதிர்ப்பை கையிலெடுத்துள்ளார்.  தமிழ்நாட்டு அரசியலுக்கு அவர் அச்சாரம் போடுவதையே இது காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

click me!