கோட்டையில் கொடியேற்றிய எடப்பாடி, இதை வாங்கி தந்தவரே கலைஞர் தான்!

By Maruthu Pandi SanthosamFirst Published Aug 15, 2018, 4:06 PM IST
Highlights

நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விசயமொன்று உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தத்தந்தார்.

இன்று 72 வது சுதந்திர தினத்தினை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.  சுதந்திர தினத்தினை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை கொடியேற்றினார். இதில், நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விசயமொன்று உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தத்தந்தார்.

1974 ம் ஆண்டிற்கு முன்பு வரை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் அந்தந்த மாநிலத்தின் ஆளுநர்கள் தான் கொடியேற்றும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால், 1974 ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் பிரதமர் இந்திரா காந்தியிடம் சண்டையிட்டு, அந்தந்த மாநில முதல்வர்கள் தான் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கொடியேற்ற வேண்டும் என்ற ஆணையை சட்டமன்றத்தில் நிறைவேற்றியவர் கலைஞர் கருணாநிதி. அது தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படுகின்றது. அன்றிலிருந்து இன்று வரை அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் தான் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களின் போது கொடியேற்றி வருகின்றனர்.

இந்த சுதந்திர தினம் மட்டுமில்லாமல், இனி தமிழ்நாட்டில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவுகள் நிச்சயம் இருக்கும்.
 

click me!