கொரொனா தொற்றை மறைத்த பிரபல பாடகி கனிகா கபூர் மீது எப்.ஐ.ஆர்.!! நடுக்கத்தில் எம்பிக்கள்..!!

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2020, 8:50 AM IST
Highlights

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், பிரபல பாலிவுட் பாடகி கனிகாவும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியானதகவலையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கொரொனா தொற்று இருப்பதை மறைத்த கனிகாகபூர் மீது உ.பி போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது. 

T.balamurukan

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், பிரபல பாலிவுட் பாடகி கனிகாவும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியானதகவலையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கொரொனா தொற்று இருப்பதை மறைத்த கனிகாகபூர் மீது உ.பி போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது. 

 பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த 10 நாட்களுக்கு முன் லண்டனில் இருந்து உ.பி.மாநிலம் லக்னோ வந்துள்ளார். கடந்த 4 நாட்களாகக் காய்ச்சல் அறிகுறி இருந்ததாகவும் இதையடுத்து மருத்துவரை சந்தித்ததாகவும் அப்போது தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததாகவும் கனிகா தெரிவித்துள்ளார்.லக்னோவில் கனிகா கபூர் கடந்த 14-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் உ.பி., மாநில சுகாதார அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்று பீதி ஏற்பட்டுள்ளதாக கூறி தன்னை தனிமை படுத்திகொண்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.

 கனிகா கபூர் நிகழ்ச்சியில், ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. துஷ்யந்த் சிங் என்பவரும் கலந்து கொண்டதால் அவருக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற பயத்தில்   இருக்கிறது.இவர் கடந்த 18 ஆம் தேதி அன்று ராஷ்டிரபதி பவனில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் ஜனாதிபதி உட்பட பலர் பங்கேற்றதால் அவருக்கும் மருத்துவ பரிசோதனை உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கொரோனா எதிரொலியாக ஜனாதிபதியின் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி.க்கள் சந்திப்பும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கனிகா கபூர் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக மேலும் பல எம்.பி.க்களான வருண், டெரிக் ஓ. பிரயைன், அனுப்ரியா படேல் உள்ளிட்டோரும் தங்களை தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்தநிலையில் நோய் தொற்று பரப்பியதாக இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரவுகளின் கீழ் உ.பி. போலீசார் கனிகா கபூர் மீது எப்.ஐ.ஆர்.  பதிவு செய்துள்ளனர்.

click me!