அமெரிக்காவில், மன்மோகனை கிழித்து தொங்கவிட்ட நிர்மலா சீதாராமன்...!! அனைத்திற்கும் காங்கிரஸ்தான் காரணம் என பொங்கினார்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 17, 2019, 9:13 AM IST
Highlights

அதாவது 2011 மற்றும் 2012 ஆம் நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன் 9 ஆயிரத்து 190 கோடியாக இருந்தது, அது 2013 -2014 ஆம் ஆண்டில் 2.16 லட்சம் கோடியாக  உயர்ந்தது என்றார். ஆனால் பாஜக தலைமையிலான ஆட்சி 2014 க்குப் பிறகுதான் பொறுப்பேற்றது என்றார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது கொடுக்கப்பட்ட கடன்களால் தான் பொதுத்துறை வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.  தற்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கும் அதுதான் காரணம் என மன்மோகன் சிங் மீது  நிர்மலா சீதாராமன் பாய்ந்துள்ளார்.

அமெரிக்காவின்  நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச மற்றும் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு,  இந்திய பொருளாதாரம் மற்றும் அது சந்தித்து வரும் சவால்கள் குறித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என குற்றம்சாட்டினார். அப்போது  ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன்,  அப்போது அதிகப்படியான கடன்களை வழங்கி அதை முறையாக வசூல் செய்யாததே வங்கிகள் வீழ்ச்சியடைய காரணமாக இருந்தது என குற்றம்சாட்டியுள்ளார்.அதாவது 2011 மற்றும் 2012 ஆம் நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன் 9 ஆயிரத்து 190 கோடியாக இருந்தது, அது 2013 -2014 ஆம் ஆண்டில் 2.16 லட்சம் கோடியாக  உயர்ந்தது என்றார். ஆனால் பாஜக தலைமையிலான ஆட்சி 2014 க்குப் பிறகுதான் பொறுப்பேற்றது என்றார். 

நிலைமை இப்படி இருக்க, நரேந்திரமோடி தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கும். மன்மோகன் சிங் மற்றும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் அப்போது தாங்கள் செய்த குளறுபடிகளை எண்ணி பார்க்க வேண்டும் என்றார்.  தற்போதுள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் அவர்களே காரணம் என்றார். ஆனால் அவர்கள் 2016இல் மோடி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் முதுகெலும்பு உடைத்து விட்டது என விமர்சிக்கின்றனர் என சாடினார்.  ஒரு பொருளாதார நிபுணர் என்றமுறையில் ரகுராம் ராஜனை நான் மதிக்கிறேன். இந்திய பொருளாதாரம் ஊசலாடிக் கொண்டிருந்த போது அவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றார். ஆனால் அவரோ ஆளுனராக நடந்து கொள்ளாமல் நட்பின் அடிப்படையில் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசி அதன்பேரில் அவர்களுக்கு கடன் வழங்கியுள்ளார் ஆனால் அவைகள் வங்கிக்கு திரும்பவில்லை என்றார்.

பொதுத்துறை வங்கிகள் அந்த இக்கட்டிலிருந்து  மீள்வதற்கு அரசின் மூலதனத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது என சரமாரியாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் மன்மோகன் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த காலம் தான் பொதுத்துறை வங்கிகளின் இருண்டகாலம் அதைப்பற்றி அப்போது நாம் அறியவில்லை நிதி அமைச்சரான பிறகுதான் அவர்கள்  செய்த குளறுபடிகள் விளங்குகிறது என தெரிவித்தார்.

click me!